கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ்...தமிழகம் வரும் ராகுல் காந்தி - என்ன காரணம்?
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 21 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ்
அண்மையில் கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 223 தொகுதிகளில் போட்டியிட்டு, சுமார் 135 இடங்களில் வெற்றியைப் பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதையடுத்து அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில் ஒருவழியாக கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்ந்தெடுக்கப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தமிழகம் வரும் ராகுல் காந்தி
இதை தொடர்ந்து நாளை மறுநாள் கர்நாடக மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களாக சித்தராமையா, மற்றும் டி.கே.சிவக்குமார் பதவியேற்க உள்ளனர்.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார்.
இதை தொடர்ந்து ராஜீவ் காந்தி நினைவு தினத்தை அடுத்து 21 ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாகவும் திரும்பெரும்புதுார் செல்லும் அவர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.