விஜய் பாஜகவின் C டீம்; அது முற்றிலும் ஜெராக்ஸ் காபி - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

Vijay DMK BJP Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 28, 2024 07:30 AM GMT
Report

நேற்று நடந்தது ஒரு சினிமா மாநாடு என அமைசர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.

தவெக மாநாடு

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நேற்று(27.10.2024) விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. 

தவெக விஜய்

இதில் 45 நிமிடங்கள் பேசிய தவெக தலைவர் விஜய், திராவிட மாடல் அரசை சாடியிருந்தார். மேலும் அவர்களை தனது அரசியல் எதிரி என குறிப்பிட்டிருந்தார்.

திமுகவை எதிர்ப்பதற்கு வலிமையான கட்சி; இதே வீரியத்துடன் விஜய் இருக்கணும் - தமிழிசை செளந்தரராஜன்

திமுகவை எதிர்ப்பதற்கு வலிமையான கட்சி; இதே வீரியத்துடன் விஜய் இருக்கணும் - தமிழிசை செளந்தரராஜன்

அமைச்சர் ரகுபதி

இந்நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து சட்டதுறை அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கைகள், அதை தமிழக மக்களிடத்தில் இருந்து அகற்ற முடியாது என்பதை நேற்றைய தினம் அவர்கள் வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும். 

ரகுபதி

அது முற்றிலும் ஜெராக்ஸ் காபி தான். எங்களுடைய கொள்கைகளுக்கு விளக்கங்கள் கொடுத்திருக்கிறாரே தவிர, வேறு எதுவும் இல்லை. தமிழக மக்களுடைய வெறுப்புக்கு ஆளாகியிருக்கிற ஆளுநரைப் பற்றி பேசினால், அவருக்கு கொஞ்சம் மரியாதை கிடைக்கும் என்பதாலேயே ஆளுநரைப் பற்றி பேசியிருக்கிறார்.

பாஜகவின் சி டீம்

இதுவரைக்கும், பல அரசியல் கட்சியினுடைய A டீம், B டீம் பார்த்திருக்கிறோம். இது பா.ஜ.கவின் C டீம். நான் நான் எந்த கட்சியினுடைய ஏ டீமோ, பி டீமோ அல்ல என்று விஜய் சொல்கிறார் ஏனென்றால் அவருக்கு தெரியும் அவர் பாஜகவின் சி டீம் என்று.

கூட்டணியில் பங்கு குறித்த கேள்விக்கு "முதலில் ஆட்சிக்கு வரட்டும் அப்போது பார்க்கலாம். மக்களை சந்திக்க வேண்டும். 234 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும். வேட்பாளர்களை நியமிக்க வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும், பெரும்பான்மை பிடித்து ஆட்சிக்கு வர வேண்டும்.

அதிமுக தொண்டர்கள்

அதன் பின்னர் தான் இதைப் பற்றி பேச வேண்டும். எங்களுடைய கூட்டணியை நிச்சயமாக யாரும் கெடுத்து விட முடியாது. தளபதி ஸ்டாலின் அவர்களிடத்தில் காட்டுகிற பாசத்தை வைத்து யாரும் எங்களை விட்டு போக மாட்டார்கள். இதே போல் பல மாநாடுகளை திமுக நடத்தி உள்ளது. எங்களை பொறுத்தவரை நேற்று நடந்தது பிரமாண்டமான சினிமா மாநாடு.

அதிமுக தொண்டர்களை இழுக்க வேண்டும் என்பதுதான் விஜயின் குறிக்கோள். அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதற்காகவே அவர் அக்கட்சியை பற்றி பேசவில்லை" என பேசினார்.