ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கர் - கவனத்தை ஈர்த்த ராகுல் காந்தி பதிவு!

Rahul Gandhi Paris Paris 2024 Summer Olympics
By Vidhya Senthil Jul 28, 2024 12:40 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சுடுதல்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில்  மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இதன் மூலமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கர் - கவனத்தை ஈர்த்த ராகுல் காந்தி பதிவு! | Raghul Wish Bronze Medal For India In The Women

போட்டியில் 22வது ஷாட்டில் மனு பாக்கர் 10.3 புள்ளிகள் பெற்ற நிலையில், கொரிய வீராங்கனை கிம் 10.5 புள்ளிகள் பெற்று 2வது இடத்திற்கு சென்றார். இதன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை கொரியா வீராங்கனைககள் வென்றனர். இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். 

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்...மேலும் ஒரு பதக்கம் வென்று இந்திய வீரர் அசத்தல்... - குவியும் வாழ்த்து..!

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்...மேலும் ஒரு பதக்கம் வென்று இந்திய வீரர் அசத்தல்... - குவியும் வாழ்த்து..!

வெண்கலப் பதக்கம்

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது.

வெண்கல பதக்கத்தை கைப்பற்றி, ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய முதல் இந்தியரான மனு பாக்கருக்கு வாழ்த்துகள். நமது மகள் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார். இந்தியாவிற்கு மென்மேலும் பதக்கங்கள் குவியவுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.