உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்...மேலும் ஒரு பதக்கம் வென்று இந்திய வீரர் அசத்தல்... - குவியும் வாழ்த்து..!

Shooting Viral Photos
By Nandhini Feb 25, 2023 07:29 AM GMT
Report

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனீஷ் பன்வாலா மேலும் ஒரு பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் - 

எகிப்தின் கெய்ரோவில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பை துப்பாக்கி / பிஸ்டல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிஸ்டல் பிரிவில், 64 பேர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் 19 வயதான வருண் தோமர், எகிப்து இன்டர்நேஷனல் ஒலிம்பிக் சிட்டி ரேஞ்சில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தினார்.

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - இந்நிலையில், இந்தியாவிற்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஆடவர் 25 மீட்டர் ரேபிட் பைர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அனீஷ் பன்வாலா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இதுவரை 4 தங்கம், 3 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.   

bronze-medal-for-anish-bhanwala-shooting-world-cup