Monday, Mar 31, 2025

விம்பிள்டன் தொடரிலிருந்து விலகுகிறேன் : ரபேல் நடால் அறிவிப்பு

Rafael Nadal
By Irumporai 3 years ago
Report

 அடிவயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக விம்பிள்டன் தொடரிலிருந்து விலகுவதாக ரபேல் நடால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

காலிறுதி போட்டி   

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளும் ஒன்று. கடந்த 6-ம் தேதி அந்த தொடரின் காலிறுதி போட்டி லண்டனில் நடைபெற்றது.

விம்பிள்டன்  தொடரிலிருந்து விலகுகிறேன்  :  ரபேல் நடால் அறிவிப்பு | Rafael Nadal Withdraws From Wimbledon

அந்த போட்டியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் - அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் மோதினர். அந்த போட்டியில் ரபேல் நடால் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தேர்வானார்

விம்பிள்டனிலும் "வாத்தி கம்மிங்" : விளக்கம் தேடிய வெளிநாட்டினர், குஷியில் தமிழர்கள்

போட்டியின் போது காயம்  

 அந்த போட்டியின் போது வயிற்றுப் பகுதியில் தசைபிடிப்பு ஏற்பட்டதால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து நடந்த மருத்துவ சோதனையில் அவரது அடிவயிற்றில் காயம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

விம்பிள்டன் தொடரில் இருந்து விலகல்

இன்று நடக்கவிருந்த அரையிறுதி போட்டியில் ரபேல் நடாலும், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸும் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரபேல் நடால், அந்த காயத்தின் காரணமாக இந்த ஆண்டு விம்பிள்டன் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.