இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி..கடுப்பான ராதிகா - சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார்!

Sarathkumar DMK BJP Social Media
By Swetha May 16, 2024 11:37 AM GMT
Report

 சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார் அளித்துள்ளார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

ஒரு கட்சியினரை குறித்து மற்றொரு கட்சியினர் விமர்சனம் செய்வது சகஜம் என்றாலும், தமிழக அரசியலில் மற்றொருவரை தரைகுறைவாக விமர்சிக்கும் வழக்கம் பெரும்பாலும் இருந்ததில்லை. குறிப்பாக, பொதுவெளியில் தரைகுறைவாக பேசும் பழக்கத்தை கொண்டிருப்பதில்லை.

இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி..கடுப்பான ராதிகா - சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார்! | Radhika Sarathkumar Files Case Against Dmk Shivaji

ஆனால், அப்படி பேசுவதையே தனது பணியாக கொண்டுள்ளார் திமுகவை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவருடைய பேச்சுக்கள் சமூகவலைத்தளங்களில் அதிகளவில் கவனம் பெறுகின்றன.அவதூறாக பேசிய காரணத்தால், சிறைக்கு சென்று திரும்பிய அவர், மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? ஏன்டா படுபாவி - சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை விளாசிய ராதிகா

ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? ஏன்டா படுபாவி - சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை விளாசிய ராதிகா

ராதிகா வழக்கு பதிவு

இதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ராதிகா மற்றும் சரத்குமார் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக அவரை கடுமையாக சாடி ராதிகா சரத்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி..கடுப்பான ராதிகா - சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார்! | Radhika Sarathkumar Files Case Against Dmk Shivaji

அதில்,ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்.

Shame on திமுக முக ஸ்டாலின் என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், அவதூறாக பேசிய விவகாரத்தில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.