மக்களவை தேர்தல்; தோல்வியை தழுவிய ராதிகா சரத்குமார் - மனம்தளர்ந்து போட்ட பதிவு!
விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தோல்வி அடைந்துள்ளார்.
ராதிகா சரத்குமார்
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களையும், இந்தியா கூட்டணி 230 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இவர் 1,64,149 வாக்குகள் பெற்றுள்ளார். அதேதொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,82,876 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
போட்ட பதிவு
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் 3,78,243 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த சூழலில், தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில்,'எல்லா போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல. அவற்றில் சில போர்களில் யாரோ ஒருவர் போரிட்டார்கள் என்று சொல்வதற்காகவே போரிடப்படுகின்றன' என்று தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில்,
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றும், தனிப்பெரும்பான்மையாக பா.ஜ.க 300 இடங்களைச் சுலபமாகத் தாண்டும் எனவும், இந்தியா கூட்டணி 150 இடங்களைக்கூட தாண்டாது என்று சொல்லப்பட்டது.
Not all battles are fought for victory, some are fought simply to tell the world that someone was there at the battlefield.
— Radikaa Sarathkumar (@realradikaa) June 4, 2024
A quote I read ??? pic.twitter.com/PH2WJMBTUb