விஜய் அரசியலுக்கு வந்தால் இது தான் கதி!! அட்வைஸ் பண்ண ராதாரவி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தீவிர அரசியலுக்கு மெல்ல நகர்ந்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என பயணித்து வருகிறார். கட்சியின் பணிகள் தேர்தலை நோக்கியே உள்ளது.
அண்மையில் விஜய் நடத்திய கல்வி விருது விழாவில், நீட் தேர்வு குறித்து பேசியதை தொடர்ந்து சரமாரியான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார் விஜய். குறிப்பாக தமிழக பாஜகவினர் மற்றும் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் கட்சியை சேர்ந்தவர்களை விமர்சனத்தை வைத்து வருகிறார்கள்.
ராதாரவி கருத்து
இந்நிலையில் தான், நடிகர் ராதாரவி விஜய் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். முதலில் விஜய் பேசிய போது திமுக தரப்பினர் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தது. ஆனால், நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பேசியதை அடுத்து, திமுகவினர் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
[IS4UUT
உடனே விஜய் திமுகவிடம் சரண்டர் ஆகினார் என்றெல்லாம் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
இப்படித்தான் மாற்றி மாற்றி அரசியலுக்கு வந்தால் பேசுவார்கள். அவற்றையெல்லாம் தாண்டி தான் வர வேண்டும் என்று ராதா ரவி பேசியுள்ளார்.