Monday, May 5, 2025

முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் - ஆம்ஸ்ட்ராங் மரணம்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்

Vijay Bahujan Samaj Party Murder Thamizhaga Vetri Kazhagam
By Karthick 10 months ago
Report

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

விஜய் பதிவு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாநில தலைவரே வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

Amstrong death

8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது கொலை சம்பவம் தொடர்பான விசாரணை முடக்கிவிடப்பட்டுள்ளது.