இனி தனியாக இல்லை!! நானும் எனது...பிறந்தநாளில் ரச்சிதா கொடுத்த surpirse!!
நடிகை ரச்சிதா மகாலக்ஷ்மி இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரச்சிதா மகாலக்ஷ்மி
தமிழ் சின்னத்திரை நாயகிகளில் தற்போது முன்னணியில் இருப்பவர் நடிகை ரச்சிதா மகாலக்ஷ்மி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டாகியிருக்கின்றது.
விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடரில் அறிமுகமான இவர், சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் பெரும் பிரபலத்தை பெற்றார். தொடர்ந்து அடுத்தடுத்த சீசனில் மீனாட்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர், பல சின்னத்திரை விருதுகளையும் அந்த கதாபாத்திரத்திற்காக வென்றுள்ளார்.
சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் தளத்திலும் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அண்மையில் கன்னட படமான ரங்கநாயகா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். தொடர்ந்து சின்னத்திரையில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் அவர், பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
2015-ஆம் ஆண்டு சக சின்னத்திரை நட்சத்திரமான தினேஷை காதலித்து மணந்து கொண்ட அவர், பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழ்கிறார். இவர்களது பிரிவு குறித்து பலவித கருத்துக்கள் கூறப்படுகின்றன. தினேஷை பிரிந்த ரச்சிதாவிற்கு விரைவில் திருமணம் என்றெல்லாம் அவ்வப்போது கூறப்படுகிறது.
ஆனால், அது இது வரை உண்மை செய்தியாக மாறவில்லை. இன்று நடிகை ரச்சிதாவின் 33-வது பிறந்தநாளாகும். இன்றைய தினத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார். புதிதாக தான் வாங்கிய வீட்டை அவ்வீடியோவில் காண்பித்துள்ள ரச்சிதா, உங்களை ரச்சிதா காஸ்டலுக்கு வரவேற்கிறேன். தனிமையின் அமைதி இப்படித்தான் இருக்கும். தனது சொந்த வழியில் 33வது வயதில் அடி எடுத்து வைக்கிறேன். எனது ஒய்னுடன் நானும் எனது சிறிய வீடும் என குறிப்பிட்டுள்ளார்.