ரச்சிதா கணவரை பிரிய உண்மை காரணமே இதுதான் - வெளியான ரகசிய தகவல்!
மனைவி ரச்சிதாவை பிரிந்தது தொடர்பான பேட்டியை தினேஷ் அளித்துள்ளார்.
ரச்சிதா-தினேஷ்
சின்னத்திரை தம்பதிகளான ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து இருக்கின்றனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அதில் பல மறைமுக பாசிட்டிவ் தகவல்களை ரச்சிதாவிற்கு கொடுத்து வந்தார். அதே சமயம், ரச்சிதா அவரது பிரிவு முடிவில் இருந்து மாறுவதாக இல்லை என உறுதியாக இருந்தார்.
விவாகரத்து?
இந்நிலையில் இந்த முடிவுக்கு காரணமாக, சம்பாதிக்கக்கூடிய பணத்தை மொத்தமும் கணவரது வீட்டாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் அவருடைய அம்மாவிற்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என பொருளாதார ரீதியில் தன்னை பெற்ற தாய்க்கு உதவக் கூடாது என தடுத்ததன் விளைவுதான் இது எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து இதுகுறித்து பேட்டி ஒன்றில் தினேஷ், ரச்சிதா மகாலட்சுமி அவருடைய வழக்கறிஞரின் ஆலோசனையை பெற்றுத் தான் இப்படி என் மீது அபாண்டமாக பழி சுமத்தி இருக்கிறார். என்னை பிரிய வேண்டும் என்பதற்காக பல பொய்களைச் சொல்ல தயாராகி விட்டார்.
எனவே இனி ரச்சிதா மகாலட்சுமி கவலைப்பட வேண்டாம் நான் விவாகரத்து கொடுத்து விடுகிறேன். இனி மேல் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என விரும்புவதில் எந்த ஒரு அறிவார்ந்த விஷயமும் இல்லை.
நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்றுத் தெரிவித்துள்ளார்.
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil