"எல்லாரும் உங்க வேலைய பாருங்க...உண்மை கசக்கத்தான் செய்யும்" - ரச்சிதா திடீர் பதிவு..?
நடிகை ரச்சிதா தொடர்ந்து வெளியிட்டு வரும் சில பதிவுகள் அவர் மறைமுகமாக தினேஷ் விவகாரத்தை தான் குறிப்பிடுகிறார் என்று தான் பலரும் கூறுகின்றனர்.
தினேஷ் - ரச்சிதா
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடிகளாக இருந்தவர்கள் தினேஷ் - ரச்சிதா மஹாலக்ஷ்மி ஜோடி. ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்று வளம் வந்த இந்த ஜோடி ஏதோ ஒரு காரணத்தால், திடீரென பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது வரை இருவரின் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், தினேஷ் மீண்டும் தான் ரச்சிதாவுடன் இணைத்து வாழ பல தருணங்களில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால், ரச்சிதா தரப்பில் இதற்கு எந்த வித சுமுகமான பதில் கிடைத்தவராக தெரியவில்லை.
இன்ஸ்டா பதிவு
இந்நிலையில் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளது ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "ஆம் உண்மை எப்போதுமே கசக்கும், அதற்காக அது உண்மை இல்லை என்று ஆகிவிடாது என குறிப்பிட்டுள்ளார்.
இது என்னுடைய போராட்டம், நானே தனியாக போராடிக்கொள்கிறேன். எல்லோரும் உங்கள் வேலையை பார்த்தால் போதும். நாங்களும் எங்களுடைய வேலைகளை பார்க்கிறோம்" என்று சற்று அதட்டலான தோணியில் கூறியுள்ளார்.