2வது திருமணத்திற்கு ரெடியான நடிகை ரச்சிதா - மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகை ரச்சிதா 2வது திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ரச்சிதா
சின்னத்திரை தம்பதிகளான ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து இருக்கின்றனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அதில் பல மறைமுக பாசிட்டிவ் தகவல்களை ரச்சிதாவிற்கு கொடுத்து வந்தார். அதே சமயம், ரச்சிதா அவரது பிரிவு முடிவில் இருந்து மாறுவதாக இல்லை என உறுதியாக இருந்தார்.
2வது திருமணம்?
தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு பின் பேசிய தினேஷ் ரச்சிதா ஒரு சுவற்றை எழுப்பி அந்த சுவற்றுக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறார். அது என்னால் உடைக்க முடியாத வகையில் வலுவாகி கொண்டே இருக்கிறது.

இதற்கு மேலே இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன் எனத் தெரிவித்திருந்தார். தற்போது, கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அந்தப் படம் வெளியான பின் ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல கன்னட இயக்குநர் தான் மாப்பிள்ளை எனக் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil