அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா ரச்சிதா..? பிரிவிற்கு இப்படியும் ஒரு காரணமா..?
நடிகர் ரச்சிதா மஹாலக்ஷ்மி தினேஷ் குறித்தான செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.
ரச்சிதா மஹாலக்ஷ்மி - தினேஷ்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடிகளாக இருந்தவர்கள் தினேஷ் - ரச்சிதா மஹாலக்ஷ்மி ஜோடி. ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்று வளம் வந்த இந்த ஜோடி எதோ ஒரு காரணத்தால், திடீரென பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது வரை இருவரின் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், தினேஷ் மீண்டும் தான் ரச்சிதாவுடன் இணைத்து வாழ பல தருணங்களில் தனது விருப்பத்தை தெரிவித்து வருகிறார்.
அரியவகை நோய்
இந்த சூழலில், நடிகை ரச்சிதாவிற்கு இருக்கும் அரியவகை நோய் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ரச்சிதாவிற்கு சாப்பிடாமலே உடல் எடை அதிகரித்து வருகிறதாம். மேலும் சாப்பாட்டை கண்ட்ரோல் செய்தும் கூட அவரால் உடல் எடை கூடாமல் இருக்க முடியவில்லையாம்.
இதனை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட திருமண பந்தத்தை முறித்துள்ள நிலையில், இதுவும் பிரிவிற்கு ஒரு காரணமா..? என பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட துவங்கிவிட்டனர்.