அப்படிப்பட்ட ஒரு நோய் இருக்கு...சாப்ட கூட முடில...வேதனையுடன் சொன்ன ரச்சிதா!!

Rachitha Mahalakshmi
By Karthick Oct 09, 2023 03:30 PM GMT
Report

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரச்சிதா மஹாலட்சுமி தனக்கு ஏற்பட்டுள்ள அரியவகை நோய் குறித்து தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ரச்சிதா மஹாலட்சுமி

பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலட்சுமி தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை சினிமாவில் அறிமுகமானார். பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர்.

rachitha-mahalakshmi-about-her-rare-disorder 

இவர் தனது முதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.பின்னர் அவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்ததாக கூறப்பட்டது.

என் பொண்ணு தம் அடிச்சா உனக்கென்ன விசித்ரா!! வரிந்து கட்டிக்கொண்டு வந்த வனிதா!!

என் பொண்ணு தம் அடிச்சா உனக்கென்ன விசித்ரா!! வரிந்து கட்டிக்கொண்டு வந்த வனிதா!!

அரியவகை நோய்

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் ஒன்றை குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில், தனக்கு வித்தியாசமான ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என குறிப்பிட்டு, பொதுவாகவே உணவு அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும் என்று கூறி, ஆனால் சாப்பாட்டை முகர்ந்து பார்த்தால் கூட தனக்கு எடை கூடி விடுகிறது என்றும் அப்படிபட்ட அரிய வகை ஹார்மோன் பிரச்சினையால்தான் அவதிப்படுவதாக கூறினார்.

rachitha-mahalakshmi-about-her-rare-disorder

சமீபத்தில் உடல் எடை அதிகரித்தால் மருத்துவரை அணுகிய போது அப்போது தான் மருத்துவர்கள் இந்த அதிர்ச்சி தகவலை சொன்னார்கள் என குறிப்பிட்ட ரச்சிதா மஹாலட்சுமி, இப்படிப்பட்ட பிரச்சனை இருப்பினும் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்து எடை கூடாத அளவிற்கு பார்த்து கொள்வதாக அந்த பேட்டியில் தெரிவித்தார்.