கணவர் மீது பொய் கேஸ் போட்ட ரச்சிதா - செம்ம டோஸ் கொடுத்து அனுப்பிய போலீசார்!

Rachitha Mahalakshmi Tamil Actors
By Vinothini Jul 06, 2023 10:46 AM GMT
Report

நடிகை ரச்சிதா தனது கணவர் மீது பொய் புகார் அளித்ததால் போலீசார் எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரச்சிதா

பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலட்சுமி தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை சினிமாவில் அறிமுகமானார். பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர்.

rachitha-has-given-fake-case-on-her-husband

இவர் தனது முதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்கள் சில காரணங்களால் பிரிந்ததாக கூறப்பட்டது.

பொய் புகார்

இந்நிலையில், இவர் கடந்த வாரம் தனது கணவர் தினேஷ் மீது மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும், அவர் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார் என்றும், மேலும், போன் செய்து மிரட்டுகிறார் என்று புகார் அளித்திருந்தார்.

rachitha-has-given-fake-case-on-her-husband

இது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய பொழுது தான் எந்த மெசேஜும் அனுப்பவில்லை என்று கூறினார். தொடர்ந்து, போலீசார் அவரது போனை வாங்கி சோதித்தபொழுது அவர் அந்த மாதிரி எதுவும் அனுப்பவில்லை என்று தெரிந்தது.

அதனால் போலீசார் அவரிடம், "இதுபோல் பொய்யான புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுத்துவிடுவேன் என சொன்னதும் பதறிப்போன ரச்சிதா, தன் வழக்கறிஞர் தான் இவ்வாறு புகார் அளிக்க சொன்னார். இப்படி புகார் அளித்தால் தான் விவாகரத்து கிடைக்கும் என சொன்னார். அதனால் தான் அப்படி செய்தேன் என கூறியுள்ளார். அப்போ விவாகரத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வியா?" என்று கேட்டு கடுமையாக திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.