இந்த பிரிவு தற்காலிகமானது என நம்புகிறேன் - நடிகை ரச்சிதா கணவர் உருக்கம்..!
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சநதிப்போம் என்ற சீரியலில் அறிமுகமானது 'சரவணன் மீனாட்சி' ரச்சிதா - தினேஷ்.
திருமணம் - பிரச்சனை
இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாக மாறினர்.இவர்கள் கடந்த 2013 ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் ஒரே துறையில் பணியாற்றிய வந்த நிலையில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளது.இருவருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த பிரச்சனையில் உள்ளே புகுந்த அவரது நண்பர்கள் சில ஆதாயங்களுக்காக பிரச்சனையை பெரிசாக ஊதிவிட்டுள்ளனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி செய்ய இரு வீட்டு பெற்றோர்களும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அது கைகொடுக்கவில்லை.
இரண்டாவது திருமணம்?
ரச்சித்தா மற்றும் தினேஷ் ஒரே வீட்டில் இருந்தால் பிரச்சனை அதிகரிக்கும் என்பதால் இருவரும் தனி தனி வீட்டில் கொஞ்ச நாட்கள் இருக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களின் பிரிவு குறித்தான தகவல்கள் அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியானது.
இந்தச் சூழலில், சமீபத்தில் நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு இணைச் செயலாளராகத் தேர்வு செய்யப் பட்டார், தினேஷ்.
அவரிடம் ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது குறித்து பிரபல செய்தி நிறுவன செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவாகரத்து செய்ய நினைக்கவில்லை
அப்போது பேசிய தினேஷ், கணவன்,மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டால் ஒரே வீட்டில் இருந்தால் சில நாட்கள் பேசாம இருப்பார்கள் ஒரு சில சேஞ்சுக்காக கொஞ்ச நாள் தனித்தனியாக இருக்கலாம்னு முடிவெடுப்பாங்க.என்னை பொறுத்தவரை எங்களுக்கிடையிலான பிரிவு தற்காலிகமானதுன்னு நம்புறேன்.
நானும் ரச்சித்தாவும், சட்டபூர்வமாக பிரிவதற்கான எந்த முயற்சிகளிலும் இந்த நிமிஷம் வரைக்கும் ஈடுபடவில்லை என்பதை இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்.
எல்லா பாரத்தையும் காலத்தின் மீது போட்டுவிட்டு பேசாமல் இருக்க வேண்டியது தான் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.