ரட்சிதாவுக்கு 2வது திருமணம் - விவாகரத்துக்கு முடிவெடுத்த கணவர்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் அறிமுகமான ரட்சிதா மகாலட்சுமி.
ரட்சிதா-தினேஷ்
இந்த சீரியலுக்கு பின் ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றார். மேலும் நடிகர் தினேஷை 2012 ஆம் ஆண்டு காதலித்து ரச்சித்தா மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார். இதனிடையே இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் தற்போது வரை குழந்தை இல்லாத காரணத்தால் தினேஷ் மனமுடைந்து உள்ளார் என்று செய்தி வெளியானது.

மேலும் தினேஷுக்கு சீரியல் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த நிலையில் ரட்சிதா மகாலட்சுமிக்கு சீரியல் வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கியது. இதனால் இவர்கள் இருவருக்கும் மனரீதியாக சண்டைகள் உருவானதையடுத்து இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.
விவாகரத்து?
இந்நிலையில், பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக வலம் வந்தார். அவரிடம் எல்லை மீறி நடந்து கொண்ட ராபர்ட் மாஸ்டருக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தது மட்டும் இன்றி, அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கோவத்தையும் தினேஷ் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் ரட்சிதாவை பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த பதிவுகளையும் தினேஷ் கார்த்திக் வெளியிடாமல் இருந்து வந்தாலும் தற்போது மனம் இறங்காத ரட்சிதாவை விவாகரத்து செய்வதற்காக தினேஷ் கார்த்திக் வழக்கறிஞர்களை சந்தித்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan