ரத்தம் சொட்டச் சொட்ட சுருண்டு விழுந்த வீரர்..பாகிஸ்தான் மைதானத்தில் நடந்த பயங்கரம்!
நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு நெற்றில் பந்து பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, பாகிஸ்தானுக்கு எதிரான (ODI) முதல் போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
50 ஓவர்களில் 330 ரன்கள் எடுத்தது. 331 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றியுடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.38வது ஓவரின் போது, குஷ்தில் ஷா அடித்த பந்தை பிடிக்க ரச்சின் ரவீந்திரா முயன்றார்.அங்குள்ள மைதானத்தில் மின் வெளிச்சம் இல்லாததால் அவர்களால் பந்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.
ரச்சின் ரவீந்திரா
இதனால் எதிர்பாராத விதமாக அவரது நெற்றில் பந்து வேகமாக பட்டு விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த ரச்சின் ரவீந்திரா ரத்தம் சொட்டச்சொட்ட மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக மைதானத்திற்கு வந்து அவரை பெவிலியன் அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து அவருக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. எனினும் பாகிஸ்தான் அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.