ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? ஏன்டா படுபாவி - சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை விளாசிய ராதிகா

Raadhika M K Stalin Tamil nadu DMK BJP
By Karthick May 14, 2024 04:33 AM GMT
Report

ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? என திமுகவின் பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை சாடியுள்ளார் ராதிகா.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

ஒரு கட்சியினரை குறித்து மற்றொரு கட்சியினர் விமர்சனம் செய்வது சகஜம் என்றாலும், தமிழக அரசியலில் மற்றொருவரை தரைகுறைவாக விமர்சிக்கும் வழக்கம் பெரும்பாலும் இருந்ததில்லை.

raadhika sarathkumar slams sivaji krishnamoorthy

குறிப்பாக, பொதுவெளியில் தரைகுறைவாக பேசும் பழக்கத்தை கொண்டிருப்பதில்லை. ஆனால், அப்படி பேசுவதையே தனது பணியாக கொண்டுள்ளார் திமுகவை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவருடைய பேச்சுக்கள் சமூகவலைத்தளங்களில் அதிகளவில் கவனம் பெறுகின்றன.

சர்ச்சை பேச்சு பிரபலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் இணைந்தார்..!

சர்ச்சை பேச்சு பிரபலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் இணைந்தார்..!

அவதூறாக பேசிய காரணத்தால், சிறைக்கு சென்று திரும்பிய அவர், மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளார்.

ராதிகா விமர்சனம்

இந்நிலையில், அவரை கடுமையாக சாடி ராதிகா சரத்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

raadhika sarathkumar slams sivaji krishnamoorthy

ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., Shame on திமுக முக ஸ்டாலின் என பதிவிட்டுள்ளார்.