ஈபிஎஸ் வாழ்க! கோஷமிட்ட ஆர்.பி.உதயகுமார் விரட்டியடிப்பு - பசும்பொன்னில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பசும்பொன்னில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருபூஜை
மருது பாண்டியரின் 221-வது குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையிலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து, அன்னதானத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடியாருக்கு தெய்வதிருமனார் அருளாசி இருந்த காரணத்தினால் தான் அன்னை தமிழகத்தில் முதலமைச்சர் ஆக நான்கரை ஆண்டு காலம் முழு ஆயுளாக இருந்தார்,
ஓபிஎஸ் க்கு பதவி இல்லை என்ற காரணத்தினால் நீங்கள் செய்கின்ற சூதுகளையும், சூழ்ச்சிகளையும் நாங்கள் எதிர்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம்.எடப்பாடியாருக்கு மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஆசியும் உண்டு, தேவர் திருமகனார் ஆசியும் உண்டு மூக்கையா தேவர் ஆசியும் உண்டு,
ஆர்.பி.உதயகுமார்
ஆனால் விவாதம் செய்கிறார்கள் ஏன் பசும்பொன்னுக்கு எடப்பாடியார் வரவில்லை என்று?அவர்களின் சூழ்ச்சிகளும், சூதுகளும் இந்த அப்பாவி மக்களுக்கு தெரியாது எங்களுக்குத் தான் தெரியும், நிச்சயமாக எடப்பாடியார் பசும்பொன்னுக்கு வருவார், காளையார்கோவிலுக்கு வருவார், இந்த உசிலம்பட்டிக்கும் வருவார்.
அது நிச்சயமாக நடைபெறும் அந்த நாள் தென் தமிழ்நாட்டில் பொன் நாளாக அமையும், வருகின்ற 30 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட தெய்வத் திருமகனாரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கத்தை செலுத்துகிறார் என்று கூறினார்.
இந்நிலையில், ஈபிஎஸ் வாழ்க என்று கோஷமிட்டதால் அங்கிருந்து பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.