டிடிவியோடு ஓபிஎஸ்ஸுக்கு ரகசிய உறவு இருக்கிறது - பகீர் கிளப்பிய ஆர்.பி. உதயகுமார்
ஓ. பன்னீர்செல்வத்துக்கு டிடிவி தினகரனுடன் ரகசிய உறவு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடியின் பாய்ச்சலை தடுப்பதற்கு ஓபிஎஸ் டெல்லிக்கு விஜயம் செய்துவிட்டு வந்திருக்கிறார்.
அங்கு மோடியை சந்தித்த அவர் கட்சி விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் டெல்லி சரியான சிக்னல் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் நீதி கேட்டு தொண்டர்களை சந்திக்க தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
டிடிவி தினகரன்
இந்த சுற்றுப்பயணம் அவருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையே, டெல்லி கைவிட்டால் சசிகலாவுடன் கைகோர்ப்பது என்ற முடிவில் ஓபிஎஸ் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சசிகலாவுடன் கைகோர்ப்பது மட்டுமில்லை
டிடிவியோடும் இணைய வேண்டும் என்ற கணக்கில் ஓபிஎஸ் இருப்பதாகவும் பேசப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகளில் இந்த சுற்றுப்பயணத்திலேயே அவர் செய்தாலும் செய்யலாம் என்கின்றனர் சிலர்.
ரகசிய உறவு
இந்நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு ரகசிய உறவு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஒற்றைத் தலைமை தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பன்னீர்செல்வம் ஒத்துழைக்கவில்லை. ஒற்றை தலைமைக்கு ஆதரவளித்தால், ஓபிஎஸ் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். குடும்ப நலனில் மட்டுமே ஓபிஎஸ் அக்கறை காட்டினார்.
குழப்பம்
அதிமுக தொண்டர்களை கண்டுகொள்ளவில்லை. அதிமுகவுக்கு நம்பிக்கைக்குரிய, வலியுமையான தலைமைதான் தேவைப்படுகிறது. இரட்டைத் தலைமையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ் டிடிவியுடன் ரகசிய தொடர்பில் இருக்கிறார். பிறகு ஏன் அவர் தினகரனோடு ஓபிஎஸ் ரகசியமாக பேச வேண்டும்” என்றார்.