சாரி வணக்கம்... ஓபிஎஸ் குறித்த கேள்வி - சட்டென்று கிளம்பிய ஈபிஎஸ்!
ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, பேட்டியை முடித்து சட்டென்று கிளம்பி சென்றார் ஈபிஎஸ்.
எடப்பாடி பழனிச்சாமி
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ்,
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அரசியல் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசவில்லை.
சாரி வணக்கம்..
பிரதமரை சந்திக்கும் திட்டம் இந்த நிமிடம் வரை இல்லை எனக்கு. தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளதையும் கஞ்சா விற்பனை அதிகரித்து இருப்பதையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன் என கூறினார்.
அப்போது ஓபிஎஸ் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, சாரி வணக்கம்... என கூறி பேட்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்தபடி சிரித்தபடியே சென்றுவிட்டார்.