சென்னை திரும்பும் ஈபிஎஸ்... பிரதமர் மோடியை சந்திக்க நேரம் வழங்கப்படவில்லை! ஏன்?
அமித்ஷா மற்றும் மோடி ஈபிஎஸ் சந்திப்பிற்கு நேரம் வழங்காத காரணத்தினால் சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி நான்கு நாட்கள் பயணமாக டெல்லி சென்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள சென்ற அவர்,
புதிய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். திரௌபதி முர்மு வரும் திங்கள்கிழமை நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார்.
டெல்லி பயணம்
இந்நிலையில், அவர் குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் சென்னை திரும்புகிறார். இன்று காலை 9 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படுகிறார். நாளை நடைபெறும் குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்,
மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.ஆனால் நேரம் வழங்கப்படாத காரணத்தால் ஈபிஎஸ் குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழாவில் கூட பங்கேற்காமல் புறப்படுகிறார்.
ஓபிஎஸ் அழுத்தம்
அதிமுக சார்பில் மாநிலங்களை உறுப்பினரும், மூத்த தலைவருமான தம்பிதுரை பங்கேற்பார் என தகவல் தெரிவுக்கப்பட்டுள்ளது. அமித்ஷா மற்றும் மோடி ஈபிஎஸ் சந்திப்பிற்கு நேரம் வழங்காதது ஓபிஎஸ்ஸின் அழுத்தம் தான் காரணம் எனவும்,
இதனால் ஈபிஎஸ் அதிருப்தியுடன் சென்னை திரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.