எந்த ஹோட்டல்'ல தங்குனீங்க கேட்குறாங்க...!! லோக் சபா பேனல் குறித்து புகார் அளித்த மஹுவா மொய்த்ரா!!
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக லஞ்சம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது புகார்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
மஹுவா மொய்த்ரா
மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜீ கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா. கடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் இவர், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தொடர் புகார்களை முன்வைத்தது காணொளிகளை பெரும் வைரலாகின.
இந்நிலையில், தான் இவர் அவ்வாறு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தினியிடம் லஞ்ச பணம் பெற்றதாக இவர் மீது பாஜக புகார் அளித்திருந்தது. இது தொடர்பாக மஹுவா மொய்த்ராவை விசாரிக்க விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கடிதம் எழுதியுள்ளார். இதற்காக விசாரணைக்கு ஆஜரான மஹுவா மொய்த்ரா நாடாளுமன்ற பேனல் குழு மீது புகார்களை அளித்துள்ளார்.
எந்த ஹோட்டலில் தங்கினீர்கள்..?
இதில் கடந்த 2-ஆம் தேதி நேரில் ஆஜரான மஹுவா மொய்த்ரா விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே பத்தியில் கோபத்துடன் வெளியேறினார். இது தொடர்பாக தற்போது நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு மஹுவா மொய்த்ரா கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “மகாபாரதத்தில் துரியோதனன் திரௌபதியின் துகில் உரிந்ததை போல, பெண் என்ற அடிப்படையில் என் மீது வார்த்தை ரீதியான துகிலுரிப்பைப் போல கேவலமான கேள்விகளைத் நெறிமுறைகள் குழுவின் தலைவரான பாஜக எம்பி வினோத் சோங்கர் கேட்டார்.
என்னிடம் நெறிமுறையற்ற, இழிவான, பாரபட்சமான முறையில் நடந்துகொண்டார் அவர். கேரக்டர் அசாசினேஷன்(Character Assassination) எனப்படும் என் மீதான பெண் என்ற அடிப்படையில் அவதூறு கட்டமைக்கும் முயற்சிகளில் இறங்கினார். அவரது நடத்தை குறித்து உங்களுக்குத் தெரிவிக்கவே இன்று மிகுந்த வேதனையுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் மஹுவா மொய்த்ரா.
பிறகு குழுவின் தலைவர் என்னிடம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் பயணம் செய்த நாடுகள், நகரங்களின் விவரங்களைக் கேட்டார். அங்கே நான் தங்கிய ஹோட்டல்களின் விவரங்களையும் கேட்டார். யார் யாரோடு தங்கினேன் என்ற விவரங்களையும் கேட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
அப்போதுதான் மக்களவை நெறிமுறைகள் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஐந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதைக் கண்டித்து வெளி நடப்பு செய்தார்கள். நானும் வெளி நடப்பு செய்தேன்” என்று மனம் திறந்து கூறியிருக்கிறார்.