ஹாப்பி நியூஸ்.. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீடிப்பு - கல்வித்துறை அறிவிப்பு!

Tamil nadu
By Vinothini Sep 26, 2023 04:48 AM GMT
Report

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலாண்டு விடுமுறை

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் கடந்த வாரம் காலாண்டு தேர்வு முடிந்தது. இதையடுத்து மாணவர்களுக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.

quaterly-leave-extended-for-class-1-to-5-students

அதில் அக்டோபர் 3-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. தற்பொழுது 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

நீடிப்பு

இந்நிலையில்,1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 3-ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 8-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.