தொலைந்துப்போன குழந்தை; பதறிய பெற்றோர்கள் - QR மூலம் கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம்!
காணாமல் போன குழந்தையை QR கோட் மூலம் குடும்பத்தினருடன் சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்.
தொலைந்த குழந்தை
மும்பையில் உள்ள வோர்லி என்ற பகுதியில் உள்ள 12 வயதான சிறப்பு குழந்தை தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த குழந்தை காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. பதறிப்போன அந்த குழந்தையின் பெற்றோர்கள் சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து பல இடங்களில் தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் கிடைக்காதபோது, ஒரு தொலைபேசி மூலம் போலீசார் ஒருவர் தொடர்புகொண்டு உங்கள் குழந்தை எங்களுடன் தான் இருக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார். அதற்கு பிறகு பெற்றோர்கள் காவல் நிலையத்துக்கு தங்களது விவரங்களை கூரியுள்ளனர்.
QR கோட்
இந்த நிலையில் குழந்தை தொலைந்த பிறகு அவர் செய்வதறியாமல் எங்கெங்கோ சுற்றியுள்ளார். அந்த வழியில் அவரை பார்த்த ஒரு காவலர், அந்த குழந்தையின் கழுத்தில் இருக்கும் ஒரு லாக்கிட்டை கவனித்தார்.அதில் ஒரு QR Code இருந்துள்ளது.
அந்த QR Code-யை Scan செய்ததில், பெற்றோர்களின் நம்பர்கள் இருந்துள்ளது. அந்த நம்பரை அழைத்து விவரங்களை பெற்று அந்த குழந்தையை பெற்றோருடன் பத்திரமாக சேர்த்துள்ளனர் காவல்துறையினர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.