மரண தண்டனை: விடாப்பிடியாக நின்ற இந்தியா - முன்னாள் கடற்படையினர் விடுதலை!

Narendra Modi Qatar India
By Sumathi Feb 13, 2024 04:52 AM GMT
Report

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய வீரர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மரண தண்டனை

இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன்களான நவ்ஜீத் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஸ்த் ஆகியோருக்கும் முன்னாள் கமாண்டர்களான அமித் நாக்பால்,

ex indian-navy-men

புர்னெது திவாரி, சுகுனாகர் பாகலா, சஞ்சீவ் குப்தா, ராகேஷ் ஆகிய 8 அதிகாரிகள் கத்தாரில் ‘தஹ்ராகுளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டென்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிறுவனம் கத்தார் ராணுவத்துக்கு சேவைகளை வழங்கி வந்துள்ளது. இந்த நிறுவனம் கத்தார் கடற்படை தொடர்புடைய நீர்மூழ்கி கப்பல் திட்டம் ஒன்றில் செயல்பட்டு வந்துள்ளது.

உலகிலேயே முதல்முறை; நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை - எதற்காக?

உலகிலேயே முதல்முறை; நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை - எதற்காக?

8 பேர் விடுதலை

இந்நிலையில், இந்த நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடர்பான ரகசிய விவரங்களை இந்த 8 அதிகாரிகள் இஸ்ரேல் அரசுடன் பகிர்ந்துகொண்டதாகவும், கத்தார் அரசு இவர்களைக் கைது செய்தது. பலமுறை ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர். ஆனால், கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை.

தொடர்ந்து, அவர்கள் அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. தொடர்ந்து, மரண தண்டனையை எதிர்த்து இந்திய அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மத்திய அரசும் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கத்தார் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

அதன்பின், 8 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்துள்ளது. அவர்களில் 7 பேர் ஏற்கெனவே இந்தியாவிற்கு வந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா வந்து சேர்ந்த அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளனர்.