Sunday, Jul 20, 2025

ஆத்தாடி இவ்வளவு பெருசா.. அசால்ட்டா மரம் ஏறிய 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு - வீடியோ வைரல்!

Viral Video Australia Snake
By Vinothini 2 years ago
Vinothini

Vinothini

in உலகம்
Report

மலைப்பாம்பு ஒன்று மரத்தில் ஏறும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

மலைப்பாம்பு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் புறநகர் மற்றும் கிராம பகுதிகளில், குளிர் காலங்களில் மலைப்பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து வரும். அங்கு ஒரு வீட்டில் மேல் கூரை மீது 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நகர்ந்து சென்றது.

python-snake-climbs-on-tree

அது அங்கு அருகில் இருந்த மரத்தின் மீது மெதுவாக ஏறி சென்றுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர், இதனை ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தினில் வெளியிட்டுள்ளனர், அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

பாம்பு பிடிப்பவர் கூறுவது

இந்நிலையில், சன்ஷைன் கோஸ்ட்டைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர் டான், ஊர்வனவற்றை அடிக்கடி சந்திக்கும் யாஹூ நியூஸ் ஆஸ்திரேலியாவிடம், பாம்புகள் அப்படி நகர்வதைப் பார்ப்பது பொதுவானது என்று கூறினார்.

மரங்களில் மலைப்பாம்புகள் இருப்பது சூரிய ஒளியைப் பெற, நாய்கள் அல்லது மனிதர்களிடமிருந்து தப்பிக்க, பறவைகள் மற்றும் பூஞ்சைகளை வேட்டையாடி சாப்பிட எனப்பல காரணங்கள் உண்டு. ”நான் மலைப்பாம்புகள் மரங்களில் வேட்டையாடுவதை விட தரையில் வேட்டையாடுவதை அதிகம் காண்கிறேன். ஆனால் இது அசாதாரணமானது அல்ல" என்று கூறியுள்ளார்.