Thursday, Jan 23, 2025

மனைவியை மரத்தில் கட்டி கணவன் உட்பட குடும்பமே தாக்கிய அதிர்ச்சி வீடியோ வைரல்...!

Viral Video Rajasthan
By Nandhini 2 years ago
Report

அந்த வீடியோவில், மனைவியை மரத்தில் கட்டி வைத்து கணவர் உட்பட ஒரு குடும்பமே சேர்ந்து அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது

ராஜஸ்தான் மாநிலம் பன்ஜ்வாரா பகுதியைச் சேர்ந்த இளம் பெண், ஒரு ஆண் நண்பருடன் பேசியதற்காக அவர் மீது சந்தேகப்பட்டு குடும்பமே சேர்ந்து அப்பெண்ணை மரத்தில் கட்டி கொடூரமாக தாக்கியுள்ளது.

தற்போது, இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். இது தொடர்பாக அப்பெண்ணை தாக்கிய கணவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த 6 பேரில் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் ரோட்டில் நடந்து சென்றபோது, எதிரே அவருக்கு தெரிந்த ஆட்டோ ஓட்டுநர் வந்ததாகவும், அந்த ஓட்டோவில் ஏறி அப்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதைப் பார்த்த அப்பெண்ணின் கணவர் சந்தேகமடைந்து இந்தக் கொடூரக் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  

viral video