பார்த்தாலே நடுங்குமே.. மலைப்பாம்பை பிடித்து கொல்லும் வினோத போட்டி!

United States of America World
By Vinothini Aug 05, 2023 08:05 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

அமெரிக்காவில் மலைப்பாம்பை பிடித்து கொள்ளும் வினோதமான போட்டி நடைபெற்று வருகிறது.

வினோத போட்டி

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் மலை பாம்புகளை பிடித்து கொல்லும் வித்தியாசமான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் வந்து ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், பர்மிய வகை மலைப்பாம்புகளை பிடித்து கொல்ல வேண்டும்.

python-killing-contest-in-usa

இதில், யார் அதிக பாம்புகளை கொல்கிறார்களோ அவர்கள் வெற்றியாளராக கருதப்படுகின்றனர். மேலும், புளோரிடா பைதான் சவால் எனும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் கனடா, பெல்ஜியம் மற்றும் லாட்வியா நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்கின்றனர்.

பரிசு தொகை

இதனை தொடர்ந்து, இந்த போட்டியில் கிடைக்கும் பரிசு பொருளுக்காக, இது ஆபத்தான விளையாட்டு என்பதை கூட பார்க்காமல் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் வெல்பவர்களுக்கு, பரிசுத் தொகை சுமார் ரூ.25 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

python-killing-contest-in-usa

புளோரிடாவின் தெற்கு பகுதியில் 20 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் உள்ள எவர்க்ளேட்ஸ் சதுப்புநில பகுதி. அங்கு அதிகமாக உலவும் பர்மிய மலைப்பாம்புகள் பிற உயிரினங்களை கொன்று சுற்றுசூழல் சமநிலையை சேதப்படுத்துகிறது. அதனால் இந்த போட்டி அவசியமானது என்று இயற்கை பாதுகாவலர் கூறுகின்றனர்.