காமன்வெல்த் பேட்மிண்டன் - தங்கம் வென்றார் தங்க மகள் பி.வி.சிந்து

Badminton India Commonwealth Games
By Sumathi Aug 08, 2022 09:50 AM GMT
Report

பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லியை வென்றார்.

காமன்வெல்த் 

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

காமன்வெல்த் பேட்மிண்டன் - தங்கம் வென்றார் தங்க மகள் பி.வி.சிந்து | Pv Sindhu Win Gold Medal Commonwealth Games

இன்றுடன் இந்த விளையாட்டு திருவிழா நிறைவடைய உள்ள நிலையில் 10-வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் கணிசமான பதக்கங்களை அறுவடை செய்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.

 பி.வி.சிந்து

இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நம்பர்-1 வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லி ஆகியோர் களம் கண்டனர்.

காமன்வெல்த் பேட்மிண்டன் - தங்கம் வென்றார் தங்க மகள் பி.வி.சிந்து | Pv Sindhu Win Gold Medal Commonwealth Games

கனடாவின் மிச்செல் லி 2014ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார். முன்னதாக, கடந்த அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரின் யோ ஜியா மின்னை 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறி வெள்ளி அல்லது தங்கப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார். இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கத்தை உறுதி செய்தார்.