அரபிக்குத்து பாட்டுக்கு மாஸா நடனமாடிய பி.வி.சிந்து - வைரலாகும் வீடியோ

Dance ViralVideo Arabic-Song P.V-Sindhu
By Nandhini Apr 20, 2022 10:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் தான் தளபதி நடிகர் விஜய். நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். அபர்ணா தாஸ், செல்வராகவன்,கிங்ஸ்லி, யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற "ஹலமித்தி ஹபிபோ" பாடல் வெளியிடப்பட்டது.

வெளியிட்ட கொஞ்ச நேரத்துல பாட்டு செம்ம ஹிட்... யார் பார்த்தாலும் இந்த பாட்டைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு இந்தப் பாட்டு பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது.

இப்பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பலர் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டனர்.

இந்நிலையில், தெலுங்கானாவைச் சார்ந்த பி.வி. சிந்துவும் ‘அரபிக்குத்து பாட்டு’க்கு ஜீன்ஸ் உடையில் நடனமாடியுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -