அணு ஆயுதத்தை விட பயங்கரமான ஆயுதம் தயார் .. இரண்டு நாடுகளை டார்கெட் செய்த புதின்!
ஓர்ஷ்னிக் என்ற இந்த ஏவுகணையை எந்த ஆயுதத்தாலும் தடுக்க முடியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
அதிபர் புதின்
ரஷ்யா - உக்ரைன் இடையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 1,000 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள்,குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா,பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வந்தன.இது மட்டுமில்லாமல் நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளைப் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி ரஷ்யாவிற்கு நெருக்கடியைக் கொடுத்தது.
தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைந்து புதிய அதிபராக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார்.இந்நிலையில், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்கியுள்ளார்.
தாக்குதல்
இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் .மேலும் உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டு இருந்தார் . இந்த நிலையில் இரண்டு நாடுகளைத் தாக்க தங்களுக்கு உரிமை உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த புதின்,''புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணை, அணு ஆயுதம் இன்றி, உக்ரைனில் புகழ்பெற்ற தொழிற்சாலைகளைத் தாக்கியுள்ளது. மேலும் ஓர்ஷ்னிக் என்ற இந்த ஏவுகணையை எந்த ஆயுதத்தாலும் தடுக்க முடியாது.
இதற்கு அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யா தாக்கத் தயாராக இருந்ததாகக் கூறினார். மேலும் இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்கா , இங்கிலாந்து தாக்குதல் நடத்தத் தங்களுக்கு உரிமை இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.