புதினை பார்க்கமுடியாமல் கதறி அழுத 8 வயது சிறுமி, வாயை பிளக்கவைக்கும் சர்ப்ரைஸ் - வைரலாகும் வீடியோ!

Viral Video Ukraine Russia
By Vinothini Jul 06, 2023 05:19 AM GMT
Report

ரஸ்யாவில் புதினை பார்க்கமுடியாமல் அழுத சிறுமிக்கு அவர் கொடுத்த சர்ப்ரைஸ் குறித்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

போர்

கடந்த ஒன்றரை வருடமாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனை நிறுத்த கூறி பல நாட்டு அதிபர்கள் அறிவுறுத்தியும் அவர் கேட்கவில்லை தொடர்ந்து உக்ரைன் மீது போர் நடத்தி வருகின்றனர்.

putin-surprises-8-years-old-girl

தற்போது இன்னும் போர் முடிவுக்கு வராத நிலையில், புதின் ரஷ்யாவின் கீழ் உள்ள தாகெஸ்தான் குடியரசுக்கு சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவரை பார்க்க டெர்பென்ட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமி ரைசாட் அகிபோவா காத்திருந்தார். ஆனால் அவரால் புதினை பார்க்க முடியவில்லை.

சர்ப்ரைஸ்

இந்நிலையில், அந்த சிறுமி அழுத வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வந்தது. நேற்று ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு 8 வயது சிறுமி ரைசாட் அகிபோவா வந்தார். அவர் அதிபர் மாளிகைக்கு சென்று புதினை பார்த்ததும் ஓடி சென்று கட்டிப்பிடித்தார்.

தொடர்ந்து, அதிபர் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு,அங்கிருந்தே நிதித்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறுமியைப் பேச வைத்தார், உடனடியாக 456 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி சிறுமியின் சொந்த பூமியான Dagestan-ன் வளர்ச்சிக்கு ஒதுக்கி இன்ப அதிர்ச்சி தந்தார், அந்த சிறுமி இவர் செய்த உதவிக்கு நன்றி கூறினார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி காண்போரை சிலிர்க்க வைக்கிறது.