காதலருடன் ரொமாண்டிக் ட்ரிப்பில் மகள் - வரிப்பணத்தில் உளவுப்பார்க்கும் புதின்?
சொந்த மகளையே செல்லும் இடமெல்லாம் புதின் உளவு பார்ப்பதாக முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதின் தனது குடும்பத்தினர் குறித்த தகவல்களை ரகசியமாகவே வைத்து உள்ளார். மேற்குலக நாடுகளின் மீது உள்ள அதிருப்தியினால், பாதுகாப்பு கருதியே ரகசியாமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
புதினின் இரண்டாவது மகள் கேடரினா டிகோனோவா. ரஷ்யாவின் கோடீஸ்வரரும் புதினின் நெருங்கிய நண்பருமான கிரில் ஷமலோவ் (40) என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தது. 4 ஆண்டுகளிலேயே அவர்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
காதலருடன் மகள்
அதன் பின், டிகோனோவா பாலே நட்சத்திரமான இகோர் ஜெலென்ஸ்கி என்பவரைக் காதலிக்கத் தொடங்கினார். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சில ரகசியத் தகவல்களைச் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கேடரினா டிகோனோவா தனது காதலன் உடன் வெளிநாடுகளுக்குச் செல்லும், ஒவ்வொரு முறையும் அவருக்குப் பின்னாலேயே உளவாளிகளை அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளாராம் புதின்.
வரிப்பணத்தில் உளவு
அவர்கள் உடன் ரஷ்ய வரிப்பணத்தில் சிறப்புச் சேவை அதிகாரிகள் படையும் உளவாளிகளும் உடன் செல்வார்கள். கடந்த 2017இல் அவர் லண்டன் சென்றிருந்த போது, டாப் உளவாளிகள் ஆறு பேர் அவர்களுக்கு அருகிலேயே 3 அறைகளில் தங்கி உள்ளனர்.
தொடர்ந்து, சுவீடன் நாட்டிற்கு கேடரினா டிகோனோவா சென்ற போது, அவருடன் சுமார் 10 டாப் உளவாளிகள் உடன் சென்று உள்ளனர். குறிப்பாக அதில் இரண்டு பேர் புதினின் மகளின் பாதுகாப்பைத் தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய அவருடனேயே பயணித்து உள்ளனர்.
மேற்குலக நாடுகள் அந்நாட்டு மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பதாக புதின் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். இந்தச் சூழலில் சொந்த மகளை உளவு பார்க்க புதினே மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்தி உள்ளது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.