புற்றுநோய், நரம்பியல் பாதிப்பு - மாளிகையில் சுருண்டு விழுந்த புதின்!
ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் புதின்
உலக அரங்கில் ஒரு சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்த போர் இன்றும் முடிந்தபாடில்லை. அதில் ரஷ்யா கைப்பற்றிய நாடுகளை கூட தற்போது இழந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த போதிலும்

ரஷ்ய அதிபர் புதின் அதனை பெரிதாக கண்டுக்கொள்வதாக இல்லை. இந்நிலையில், புதின் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு வகை நோயாகும்.
உடல்நிலை மோசம்
மேலும், இவருக்கு மனச்சிதைவு நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாகச் சர்வதேச அரசியல் ஆய்வாளர் வலேரி சோலோவி தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கணைய புற்றுநோய் இருப்பதாகவும் கூறப்பட்டது.
தொடர்ந்து, மோசமான நோய்கள், தொடர் சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் புதின் சுமார் 10 கிலோ வரை உடல் எடையை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிபர் மாளிகையில் ஐந்து படிகள் உருண்டு வந்து கீழே விழுந்ததாகவும் அருகில் இருந்த பாதுகாவலர்கள் உதவித்தான் புதினால் நிற்கவே முடிந்தது என்றும் தகவல் வெளியானது.