ரகசிய காதலியுடன் ஆடம்பர மாளிகையில் வசிக்கும் புதின் - திகைப்பூட்டும் தகவல்
அதிபர் புதின் தனது ரகசிய தோழிக்கு ஆடம்பர மாளிகையை அன்பளித்துள்ளார்.
அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின் (70). இவரது நீண்ட கால தோழியாக அலினா கபாவே(39) என்பவர் வலம் வருகிறார். ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக பிரபலமானவர், புதினுக்கு மிகவும் நெருக்கமானார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராகவும் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, புதினின் அறிவிக்கப்படாத ரகசிய காதலியாக இருந்தார். இவர் புதினின் 4 குழந்தைகளுக்கு தாய் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தின் தனது காதலியுடன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள வால்டாயில் உள்ள ஒரு ரகசிய அரண்மனையில் வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதலி அலினா
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள குளிர்கால அரண்மனையை ஒத்த இந்த “தங்க மாளிகை” 1996 இல் கட்டப்பட்டதாகவும், புதின் அரசியலில் நுழைந்த சில ஆண்டுகளில் தனது மனைவி லியுட்மிலா ஓச்செரெட்னாயாவை விவாகரத்து செய்து அதன்பின் காதலி கபீவாவை வீட்டிற்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஆடம்பர அரண்மனையில் சோலாரியம், கிரையோ சேம்பர், 25 மீட்டர் நீச்சல் குளம், ஹம்மாம், சானா, மண் அறை, மசாஜ் குளியல், அழகு சாதனவியல் மற்றும் பல் மருத்துவப் பகுதிகள் கொண்ட ஒரு பெரிய ஸ்பா ஆகியவை உள்ளதாம்.
மேலும், சுவரோவியமான கூரைகள், கிரேக்க கடவுள்களின் சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்ட பளிங்கு நீச்சல் குளம், 27,000 சதுர அடி விருந்தினர் மாளிகை, பாரம்பரிய ஹம்மாம்கள் கொண்ட ஸ்பாக்கள், ஒரு இசைக் கூடம், ஊழியர்களுக்கான அறைகள், ஒரு தியேட்டர், ஒரு பனிக்கட்டி ஹாக்கி ரிங்க், ஒரு சூதாட்ட விடுதி என திகைப்பூட்டும் பல அம்சங்கள் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.