ரஷ்ய அதிபர் புதின் கொலை செய்யப்படுவார் - அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசம்...!

United Russia Vladimir Putin Volodymyr Zelenskyy Ukraine World
By Nandhini Feb 28, 2023 06:35 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

“ரஷ்ய அதிபர் புதின் அவரது நெருங்கிய வட்டத்தினரால் கொலை செய்யப்படுவார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிபர் ஜோ பைடன் திடீர் பயணம்

ஒரு வருடமாக உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், சமீபத்தில் திடீரென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு பயணம் மேற்கொண்டார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் கியேவில் சந்தித்து பேசினர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாரத வகையில் உக்ரைன் சென்றார். கடைசி வரை அவருடைய பயண விவரம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தத்திலிருந்து விலகிய ரஷ்யா

இதனையடுத்து, கடுப்பான ரஷ்யா அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உக்ரைன் பயணத்தையடுத்து, அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகியது. Start என்னும் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா, ரஷ்யா இடையே அணு ஆயுதங்களை குறைக்க வழிவகுக்கிறது. இந்த ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகியுள்ளதால் இந்த விவகாரம் உலக மக்களால் உற்று நோக்கப்படுகிறது.

volodymyr-zelenskyy-vladimir-putin

அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசம்

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அவரது நெருங்கிய வட்டத்தினரால் கொலை செய்யப்படுவார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ரஷ்ய அதிபர் புதின் அவரது நெருங்கிய வட்டத்தினரால் கொலை செய்யப்படுவார். உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய அதிபர் புதினின் உள்வட்டத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது. நிச்சயம் இது நடைபெறும். ஆனால், எப்போது என்பது எனக்கு தெரியாது என்றார்.