படிக்கட்டில் இருந்து விழுந்த புதின் - வைரலான செய்திக்கு முற்றுப்புள்ளி!

Vladimir Putin Russian Federation
By Sumathi Dec 06, 2022 10:46 AM GMT
Report

புதினின் உடல்நிலை மோசமாக இருப்பதாக செய்திகள் பரவிய வண்ணம் இருந்தது.

புதின் உடல்நிலை

மாஸ்கோவில் உள்ள மாளிகையில் ரஷ்ய அதிபர் புதின் மாடி படிக்கட்டில் இறங்கியபோது தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் 2 வகையான புற்றுநோயாலும்,

படிக்கட்டில் இருந்து விழுந்த புதின் - வைரலான செய்திக்கு முற்றுப்புள்ளி! | Putin End To Rumors About His Health Drives

நரம்பியல் பாதிப்பாலும் பாதிக்கப்பட்டுள்ள புதினின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக செய்திகள் பரவியது. இந்நிலையில், ரஷ்யாவின் கிரீமியா பகுதியில் உள்ள பாலத்தில் குண்டு வெடிப்பு நடந்தது.

முற்றுப்புள்ளி

அதில் பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து, பாலத்தை சீரமைக்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டது. அதன்பின் அந்த பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. மேலும், அதனை பார்வையிட புதின் நேரில் சென்றார்.

அப்போது, அவர் பாலத்தில் காரை ஓட்டி சென்றார். பின்னர் பாலத்தின் பழுது பார்ப்பு பணிகள் குறித்த அறிக்கையை துணை பிரதமர் மராட் குஷ்னுலினிடம் கேட்ட புதின், கட்டுமான தொழிலாளர்களிடம் உரையாடினார்.

இதன்படி, தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதின் பொது வெளியில் தோன்றினார்.