ராணுவத்தில் உள்ள இந்தியர்களுக்காக பேசிய மோடி - சம்மதம் தெரிவித்த புதின்
ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் தொடர்பான பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு ரஷ்யா அதிபர் புதின் சம்மதித்துள்ளார்.
நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 வது முறையாக பதவியேற்றிய பின்பு அதிகாரபூர்வ பயணமாக ரஷ்யா-வுக்கு சென்றுள்ளார். ஜூன் 8 - 9 தேதிகளில் அவர் ரஷ்யாவில் இருப்பார். கடைசியாக பிரதமர் மோடி 2019 ல் ரஷ்யா சென்று ரஷ்யா அதிபர் புதினை சந்தித்தார்.
ரஷ்யாவில் அதிக சம்பளம் வழங்கும் வேலைகள் வழங்கப்படும் என்று இளைஞர்களை ஏமாற்றிய நெட்ஒர்க் பல மாநிலங்களில் பரவியுள்ளதை சிபிஐ சமீபத்தில் கண்டுபிடித்தது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த சில நபர்கள் இராணுவ சீருடை அணிந்து, உக்ரைனில் போரிடுவதில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறி இந்த ஆண்டின் தொடக்கத்தில் வீடியோ வெளியிட்டனர்.
புதின் சம்மதம்
இதே போல் சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் போன்ற உதவி ஊழியர்களாக பணியாற்ற ரஷ்ய இராணுவத்தால் 200 இந்தியர்கள் வரை ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று(08.07.2024) இரவு விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட இரவு விருந்து அளித்துள்ளார். இந்த விருந்தின் போது ரஷ்யா ராணுவத்தில் உள்ள இந்தியர்களை விடுவிப்பது குறித்து பிரதமர் மோடி, ரஷ்யா அதிபர் புதினுடன் பேசியதாகவும், அவர்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கு புதின் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.