மோடியின் ரஷ்யா பயணம்; உலக அரங்கில் கவனம் பெரும் சென்னை - என்ன காரணம் தெரியுமா?
மோடியின் ரஷ்யா பயணம் மூலம் சென்னை குறித்தான திட்டம் ஒன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 வது முறையாக பதவியேற்றிய பின்பு அதிகாரபூர்வ பயணமாக ரஷ்யா-வுக்கு சென்றுள்ளார். ஜூன் 8 - 9 தேதிகளில் அவர் ரஷ்யாவில் இருப்பார். கடைசியாக பிரதமர் மோடி 2019 ல் ரஷ்யா சென்று ரஷ்யா அதிபர் புதினை சந்தித்தார்.
தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செல்லும் பிரதமர் மோடி உலகின் முக்கிய பிரச்சனைகள், இரு நாடுகளின் உறவு குறித்தும் பேச உள்ளனர். மாஸ்கோவில் உள்ள இந்தியர்களை சந்தித்தும் கலந்துரையாட உள்ளார்.
சென்னை
இந்நிலையில் மோடி ரஷ்யா சென்றுள்ள நிலையில் சென்னை தொடர்பான திட்டம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. இது சென்னை- ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் முக்கிய நகரமான விளாடிவோஸ்டோக் இடையேயான கடல்வழி சரக்கு போக்குவரத்து பாதை திட்டம் தான். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2019 ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவில் நடந்த Eastern Economic Forum கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்த பொழுது கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, சென்னை துறைமுகத்திற்கும், விளாடிவோஸ்டாக் துறைமுகத்திற்கும் இடையே கடல் வழித்தடம் அமைக்கப்பட்டு, இதன் வழியே நிலக்கரி, எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு மற்றும் இரு நாடுகளுக்கிடையே ஏற்கனவே ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டு வரும் பிற சரக்குகளையும் இந்த வழித்தடம் வாயிலாகக் கையாளும். மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள துறைமுகங்களில் கப்பல்கள் நின்று செல்லலாம்.
சூயஸ் கால்வாய்க்கு பதிலாக இந்த வழித்தடத்தில் பயணம் செய்தால் 5,608 கிலோமீட்டர் குறைவாக உள்ளதாகவும், 40 நாட்கள் பயணம் 24 நாட்களாகவும் குறைய உள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து கட்டணம் குறைவதாகவும் ,அதன் காரணமாககுறைந்த விலையில் பொருட்களைப் பெற முடியும். கொரோனா மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த இந்த திட்டம் பிரதமர் மோடியின் தற்போதைய ரஷ்யா பயணம் மூலம் கவனம் பெற்றுள்ளது.