உள் இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டம் - கொட்டும் மழையில் சாலையில் படுத்த கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணசாமி
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி இன்று(07.11.2024) பேரணி நடத்த உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.
இதனையடுத்து புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு குவிந்தனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு.. பிரிவினையை உண்டாக்கும், இந்தியாவை துண்டாக்கும் - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!
கிருஷ்ணசாமி கைது
இந்நிலையில் அனுமதித்த நேரத்தில் போராட்டம் நடத்தவில்லை என்று கூறிய காவல்துறையினர், கிருஷ்ணசாமி உள்பட அவரது கட்சியினரை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், கட்சியினர் கலைந்து செல்ல மறுத்ததால், காவல்துறையினருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து கட்சி தொண்டர்களை கைது செய்த காவல்துறையினர் அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். தொண்டர்களை கைது செய்ததை கண்டித்து கிருஷ்ணசாமி கொட்டும் மழையில் நடுரோட்டில் படுத்து தர்ணா போராட்டம் செய்தார்.
இதன் பின் பேசிய கிருஷ்ணசாமி, "காவல்துறையினர் அனுமதி வழங்கிய பிறகே போராட்டம் அறிவித்தோம். தற்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்துள்ள நிலையில் எந்த காரணமும் சொல்லாமல் களைந்து செல்ல கூறுகின்றனர்" என தெரிவித்தார். அதன் பின்னர் அவரும் கைது செய்யப்பட்டார்