40 ஆண்டுகளாக பூட்டப்பட்ட அறை - ஒடிசா பூரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறையை திறந்த பாஜக அரசு
24 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிசா மாநிலத்தில் ஆட்சி நடைபெற்றுள்ளது.
ஆட்சி மாற்றம்
ஒடிசா மாநிலத்தில் 24 ஆண்டுகளுக்கு கழித்து ஆட்சி மாற்றம் வந்துள்ளது. தொடர்ந்து 2000ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வந்த பிஜு ஜனதா தள் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்துள்ளது பாஜக
ஒடிசா மாநிலத்தின் மிக பெரிய சுற்றுலா தளம் என்பது பூரி ஜெகநாதர் கோவில். உலக நாடுகளில் இருந்து அக்கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் வருவது உண்டு. இக்கோவிலின் பொக்கிஷ அறை சுமார் 40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
திறப்பு
'ரத்ன பந்தர்' எனப்படும் பொக்கிஷ அறை இன்று திறக்கப்பட்டுள்ளது. நேற்று ஒப்புதல் அளித்தது அம்மாநிலத்தின் அரசு. கோவிலுக்கு சொந்தமான நகைகள் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களை பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
முன்னர் நீண்ட ஆண்டுகள் பகுப்பாய்வு செய்ய எடுத்துக்கொள்ளப்பட்டாலும், தற்போது நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் விரைவில் முடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.