24 ஆண்டுகால நவீன் பட்நாயக்கின் ஆட்சிக்கு முடிவுரை எழுதும் பாஜக? ஒடிசாவில் மலரும் தாமரை

BJP Odisha Lok Sabha Election 2024
By Karthick Jun 04, 2024 07:05 AM GMT
Report

நவீன் பட்நாயக்

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மாநிலத்தின் முதல்வராக உள்ளார்.சட்டமன்ற தேர்தல் ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பிஜு ஜனதா தள் கட்சி ஆட்சியில் உள்ளது.

naveen Patnaik

அம்மாநிலத்தின் முதல்வராக நவீன் பட்நாயக் 24 ஆண்டுகால தொடர்ந்தார். மொத்த சட்டமன்ற தொகுதிகள் 147.

Breaking News : திருச்சியில் கடும் போட்டி கொடுக்கும் நா.த.க - சீமான் அதிரடி பயனளித்ததா?? நிலவரம் என்ன!

Breaking News : திருச்சியில் கடும் போட்டி கொடுக்கும் நா.த.க - சீமான் அதிரடி பயனளித்ததா?? நிலவரம் என்ன!

இதில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 112 இடங்களை பெற்ற பிஜு ஜனதா தள் தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைத்தது. இம்முறை பாஜக பெறும் பலத்துடன் தேர்தலை சந்தித்தது.

மலரும் தாமரை 

கடந்த முறை அக்கட்சி 23 இடங்களை மட்டுமே வென்று இருந்தது. தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில், பாஜக தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

naveen Patnaik modi odisha

75 இடங்களை பாஜக தன்வசப்படுத்தியுள்ளது. பிஜு ஜனதா தள் 56, காங்கிரஸ் 13, சுயேட்சைகள் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 24 ஆண்டுகால நவீன் பட்நாயக்கின் ஆட்சிக்கு முடிவுரை எழுதும் விளிம்பில் உள்ளது பாஜக.