கதறிய 10 வயது சிறுவன்; கொடூரமாக தாக்கிய ஆசிரியர் - பதறவைக்கும் சம்பவம்!
பள்ளி சிறுவனை, ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கொடூர தாக்குதல்
பஞ்சாப், லூதியானாவில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் 10 வயது மாணவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், இரு மாணவர்களை அழைத்து அந்த சிறுவனின் கை, கால்களைப் பிடித்துக் கொள்ள வைத்து ஆசிரியர் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
ஷாக் சம்பவம்
குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஆசிரியர் இரண்டு நாட்கள் தொடர்ந்து அந்த குழந்தையை இப்படி அடித்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து வீட்டில் சொல்லக் கூடாது என்றும் அப்படிச் சொன்னால் பள்ளியில் இருந்து டிசி கொடுத்துவிடுவேன் என மிரட்டியிருக்கிறார்.
Horrific!
— زماں (@Delhiite_) September 23, 2023
LKG student brutaIIy beåten by teacher in Ludhiana school, causing serious injuries
- accused teacher tørtured him for 2 days
- Police took sou moto & Arrested Sri Bhagwan under Sections 323, 342, 506 IPC & under Section 75, 82 of the Juvenile Act… pic.twitter.com/5Ki4XGxK5r
இதனால் அந்த சிறுவனும் தனது வீட்டில் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் அவர் நடப்பதை பார்த்து கண்டிப்புடன் கேட்ட தாயிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார்.
உடனே தாய் அந்தச் சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்து, போலீஸில் புகாரையும் அளித்துள்ளார்.
இதற்கிடையில் தாக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி அதிகம் பரவியது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.