8 கோடி கொள்ளை; 10 ரூபாய் ஜூஸில் சிக்கிய பலே தம்பதி - சினிமாவை மிஞ்சிய சம்பவம்!
கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த தம்பதி இலவசத்திற்கு ஆசைப்பட்டு ஏமாந்து சிக்கியுள்ளனர்.
8 கோடி கொள்ளை
பஞ்சாப், லூதியானாவில் நிறுவனம் ஒன்றில், 8 கோடியே 49 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் 12 பேர் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன்பின், அதில் முக்கிய நபராக மந்தீப் கவுர் என்ற பெண் அறியப்பட்டார். மேலும், ஒவ்வொரு முறை கொள்ளை அடித்ததும், அதற்கு நன்றி சொல்வதற்காகச் சீக்கிய குருத்துவாரா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
சிக்கிய தம்பதி
இதனால், போலீஸார் கோவிலில் அந்தப் பெண்ணையும், கணவர் ஜஸ்விந்தர் சிங்கையும் தேடியுள்ளனர். கோயில் வளாகத்தில் ஆங்காங்கே காவல்துறையினரால் குளிர்பான பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது பெண் ஒருவர் குளிர்பானம் குடிக்க வந்துள்ளார்.

அதில், அவர் முகத்தில் இருந்த முக்காட்டை விளக்கிய போது, கண்டறிந்து போலீஸார் அவரைச் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட ரூ.8 கோடி ரூபாயில் இருந்து ரூ. 6 கோடியை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.