அரும்பாக்கம் வங்கி கொள்ளை - கொள்ளையன் முருகன் பரபரப்பு வாக்குமூலம்!

Chennai Tamil Nadu Police Crime
By Sumathi Aug 16, 2022 08:01 AM GMT
Report

வங்கி கொள்ளை வழக்கில் போலீசார் விசாரணையில் முக்கிய நபரான முருகன் பரபரப்பான வாக்குமூலங்களை அளித்துள்ளார்.

வங்கி கொள்ளை

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரும்பாக்கம் வங்கி கொள்ளை - கொள்ளையன் முருகன் பரபரப்பு வாக்குமூலம்! | Arumbakkam Bank Robbery One More Arrested

இந்த வங்கியின் சார்பில் பொது மக்களிடம் இருந்து அடமானமாக பெற்றிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனால் வங்கி கிளை முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 32 கிலோ நகைகள்

இதில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து முருகனின் செல்போன் எண்ணை வைத்து துப்புதுலங்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர்.

அரும்பாக்கம் வங்கி கொள்ளை - கொள்ளையன் முருகன் பரபரப்பு வாக்குமூலம்! | Arumbakkam Bank Robbery One More Arrested

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் முருகனையும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க வலை விரித்தனர்.

20 கிலோ நகை பறிமுதல்

இதில் முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 20 கிலோ நகைகள் மீட்கப்பட்டன.

பெடரல் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளில் இவர்கள் 3 பேரும் 20 கிலோ நகைகளை பங்கு போட்டு பிரித்து எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முருகன் வாக்குமூலம்

பாலாஜி, சந்தோஷ், முருகன் உள்ளிட்ட 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். தற்போது கோவையில், சூர்யா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், வங்கி கொள்ளையின்போது அலாரம் ஏன் எச்சரிக்கவில்லை என்பது குறித்த கேள்விக்கு, முன்கூட்டியே திட்டமிட்டு இண்டர்நெட் இணைப்பை துண்டித்ததால் வங்கி தலைமையகத்திற்கு அலாரம் எச்சரிக்கை செய்யவில்லை.

அதன்பின் 2 சாவிகளை பயன்படுத்தி திறக்கும் வகையிலான ஸ்ட்ராங்ரூமை திறந்து லாக்கரில் இருந்து கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.