ஆன்லைன் கேமில் வந்த டாஸ்க் - 14 வது மடியில் இருந்து குதித்த சிறுவன்
ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன் 14 வது மடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
ஓவியம்
புனேவை சேர்ந்த 10வது படிக்கும் சிறுவன் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் 14வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் அறையை சோதனையிட்டுள்ளனர். அந்த அறையிலிருந்து ஓவியங்களை கண்டெடுத்துள்ளனர். அந்த ஓவியத்தில், அவர் தங்கியிருக்கும் வீட்டின் கட்டிடம் மற்றும் அவரது அறை ஆகியவை வரையப்பட்டிருந்தது.
டாஸ்க்
மேலும், அந்த ஓவியத்தில் பால்கனி வரைந்திருந்த இடத்தில் JUMP என்று எழுதப்பட்டிப்பதை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவனின் லேப்டாப்பை கைப்பற்றியுள்ளனர். ஆனால் பாஸ்வேர்டு தெரியாததால் அதை திறக்க முடியவில்லை.
இது குறித்து அந்த சிறுவனின் தாய் தந்தையிடம் விசாரித்த போது, இவன் ஆன்லைன் கேம் விளையாட ஆரம்பித்த சில மாதங்களிலேயே இவனது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. கேம் விளையாட வேண்டாம் என நான் லேப் டாப்பை இவனிடம் பறித்தால் , என்னிம் கோபப்படுவான். இவன் விளையாடிய விளையாட்டில் மாடியிலியிருந்து குதிக்க சொல்லி டாஸ்க் கொடுத்திருப்பார்கள். உடனே எதையும் யோசிக்காமல் இந்த முடிவை எடுத்திருக்கிறான் என சிறுவனின் தாய் கூறினார்.
வாட்ஸ் அப் குரூப்
எனது மகன் படிப்பில் சிறந்து விளங்கியதற்காக சில நாட்களுக்கு முன்பு கூட அவனது ஆசிரியரிடத்திலிருந்து பாராட்டை பெற்றார். அவன் லேப்டாப்பை படிப்பதற்காக தான் பயன்படுத்துகிறான் என நினைத்தோம். ஆனால் விளையாடுவதற்கு பயன்படுத்தினான் என தெரியவில்லை என்று சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.
சிறுவன் இறந்ததை கூட சிறுவனின் பெற்றோர்கள் அவர்களது சொசைட்டி வாட்ஸ் அப் குரூப்பில் பலர் பதிவிட்டதன் மூலம் தான் தெரிந்து கொண்டுள்ளனர்.