அடுக்குமாடிக் குடியிருப்பில் 300 பூனைகளை வளர்த்த பெண் - விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!
பெண் ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் 300 பூனைகளை வளர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஹடாப்சரில் உள்ள மார்வெல் பவுண்டி ஹவுசிங் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ரிங்கு பரத்வாஜ் மற்றும் அவரது சகோதரி ரிது பரத்வாஜ் வசித்து வந்துள்ளனர்.அவர்கள் வீட்டில் பூனைகளை வளர்த்து வந்துள்ளனர்.
இதனால் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் துர்நாற்றம் மற்றும் சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறி கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் காவல்துறையினருக்குப் அக்கம்பக்கத்தினர் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் குடியிருப்பில் சோதனை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்ட பெண் தனது வீட்டில் உள்ள மூன்று படுக்கையறைகளில் சுமார் 300 பூனைகளை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்பூனைகள் அனைத்தும் சரியான கால்நடை பராமரிப்பு, தடுப்பூசி பதிவுகள் மற்றும் கருத்தடை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
300 பூனை
இது குறித்து PMC தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி டாக்டர் சரிகா ஃபண்டே-போசலே கூறுகையில் விலங்குகளுக்கு முறையான மருத்துவ பராமரிப்பு, உணவு மற்றும் வாழ்விடத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
இதனால் குடியிருப்பில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அந்தப்பூனைகளைப் பொருத்தமான வேறு இடத்துக்கு மாற்றுமாறு அந்த பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.